MAIN MENU

mAgent

 
mAgent என்பவர் யார்?
‘mAgent’ என்பவர் SLT-MOBITEL நிறுவனத்தின் நிலையான மற்றும் மொபைல் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாடு முழுவதும் பணியமர்த்தப்பட்ட நபர்கள். நிலையான அல்லது மொபைல் இணைப்புகள் மூலமாக நவீன உலகத்துடன் உங்களை சேர்ப்பதற்காக உங்கள் வீட்டுக்கே வந்து துரிதமாக உதவிட எங்கள் mAgent கள் சேவை வழங்க தயாராக உள்ளனர்.
 
mAgent என்பவர் தற்போது உள்ள அல்லது புதிதாக எமது வலையமைப்புடன் இணைய உள்ள வாடிக்கையாளர்களுக்கு உதவ அவர்களின் சொந்த நகரம் அல்லது கிராமத்தில் இருந்து பணிபுரியும் ஒரு நபர்கள்.
 
எவ்வாறன சேவைகளை mAgent மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்?
mAgent மூலம் SLT-Mobitel நிறுவனத்தின் நிலையான மற்றும் மொபைல் இணைப்புகள் தொடர்பான சேவைகள் பெற்றுக்கொள்ள முடியும்.
 
(Mobitel நிறுவனத்தில் இருந்து புதிதாக பெற்றுக்கொள்ளப்படும் முற்கொடுப்பனவு / பிற்கொடுப்பனவு/பிராட்பேண்ட் (Broadband) இணைப்புகள் / சிம் மாற்றங்கள்/ வேறேதேனும் பரிமாற்றம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு சில சேவைகலும் வழங்கப்படும். கட்டணங்கள் அறவிடப்படும்)
 
வாடிக்கையாளர் கோரிக்கை கேட்ப SLT நிறுவனத்தின் Home routers / Fiber connections / PEOTV போன்ற சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
 
(மேற்குறிப்பிட்ட அனைத்து சேவை தொடர்பான விநியோகங்கள் எமது கையிருப்பு மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
 
எவ்வாறு ஒரு வாடிக்கையாளர் mAgent ஒருவரின் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்?
1717 என்ற இலக்கத்தின் ஊடாக வாடிக்கையாளர் பிரதிநிதி ஒருத்தரை தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம் அல்லது www.sltmobitel.lk என்ற இணையதளத்தின் ஊடாக doorstep delivery எண்ணும் tab ஐ தெரிவுசெய்யது விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பிக்க முடியும்.
 
வாடிக்கையாளர் சேவை பிரதிநிதி ஊடாக முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பான தகவல் SMS ஊடாக வாடிக்கையாளருக்கு உறுதிபடுத்தப்படுமா ?
ஆம், அனைத்து தகவல்களும் SMS ஊடாக வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படும்.
 
mAgent ஊடாக வாடிக்கையாளர் குறித்த சேவையினை பெற்றுக்கொள்ள எடுக்கப்படும் கால அவகாசம் எவ்வளவு?
சேவையை உறுதி செய்து 48 மணி நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியும். (ஆனாலும்,குறிப்பிட்ட கால அவகாசம் சேவையினை பொறுத்து மாறுபடலாம் )
 
இச்சேவைகளுக்கான கட்டணம் எவ்வாறு அறவிடப்படும்?
சிம் கட்டணங்கள் மற்றும் பிற தொடர்புடைய கட்டணங்கள் தேவையின் அடிப்படையில் அறவிடப்படும்.
 
விநியோக கட்டணங்கள் தூரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். இருப்பினும், இது ரூ 300/-க்கு மேற்படாதவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
 
mAgent எவ்வாறு தொழிற்படுகின்றார்?
mAgent 3 - 5 கி.மீற்றர் சுற்றளவில் அவரது குடியிருப்புக்குள் செயல்படுவார். அதிகாரப்பூர்வ விநியோக நேரம் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இருக்கும்.. இருப்பினும் இச்சேவை நேரம் பிரதிநிதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீடிக்கப்படலாம்.
 
வாடிக்கையாளர் பண அட்டை (Card) மூலம் பணம் செலுத்த முடியுமா அல்லது பணப் பரிமாற்றம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுமா?
பணப் பரிமாற்றம் மட்டுமே தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
 
 

Looking for...