தாயக சுருக்கக் குறிகளை அடைந்து கொள்ளல்
உங்களுடைய குரல்அஞ்சல் இலக்கங்கள் நினைவில் இல்லையா? தாயகத்திலுள்ள உங்களது வாடிக்கையாளர் சேவைக்கு அழைப்பினை ஏற்படுத்துவதில் சிக்கல்களா? கவலையை விடுங்கள். மொபிடெலினுள் நுழைந்துகொள்வதன் மூலம் உங்களது குரல் அஞ்சல்களைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது உங்களது வாடிக்கையாளர் சேவை நிலையத்தைத் தொடர்புகொள்வதற்குத் தேவையான உங்களுக்கு பரீட்சயமான சுருக்கக் குறிகளை நீங்கள் டயல் செய்து தாயகத்தில் உள்ளவாறான அதே சௌகரியத்தினை அனுபவிக்க முடிகின்றது..
உ-ம்: ஐக்கிய இராச்சியத்தின் T-Mobile இணைப்பிலுள்ள வாடிக்கையாளர் ஒருவர் இலங்கையில் உள்ள போது தனது குரல் அஞ்சலை அடைந்துகொள்ள விரும்புகின்றார். அவர் ஐக்கிய இராச்சியத்தில் மேற்கொள்வதைப் போலவே அதே சுருக்கக் குறியீட்டை இலகுவாக டயல் செய்வதன் மூலம் அதனை அடைந்துகொள்ள முடிகின்றது.
தொலைபேசி பெயரேட்டிலிருந்து நேரடியாக டயல் செய்தல்
தொலைபேசி பெயரேட்டிலிருந்து நேரடியாக டயல் செய்தல்
இலங்கையில் ரோமிங் செய்பவர்கள் தமது தாய்நாட்டில் உள்ளபோது ஒரு இலக்கத்திற்கு அழைப்பை நேரடியாக டயல் செய்கின்ற சௌகரியமும் பயனும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
E.g. :ஜேர்மனியிலிருந்து வந்து இலங்கையில் மொபிடெல் மூலமாக ரோமிங் செய்கின்ற ஒருவர் ஜேர்மனியில் உள்ள தனது நண்பருக்கு அழைப்பை மேற்கொள்கின்ற போது நாட்டின் குறியீட்டு இலக்கத்தை உள்நுழைக்க வேண்டிய தேவையின்றி நேரடியாகவே டயல் செய்ய முடியும். தொலைபேசியில் பெயர் ஏட்டிலிருந்து இலகுவாக நேரடியாகவே டயல் செய்ய முடிகின்றது.
Travelling Connect மூலமான நம்பிக்கை புள்ளிகள்.
ஒரு முன்னணி சர்வதேசமய நம்பிக்கை முகாமைத்துவ சேவைகள் வழங்குனரான ‘Travelling Connect’ உடன் தொடர்புபட்டுள்ள இலங்கையின் ஒரேயொரு மொபைல் சேவை வழங்குனராக மொபிடெல் திகழ்கின்றது. புள்ளிகளை அல்லது மைல்களை சேகரித்துக்கொள்ளும் பொருட்டு நீங்கள் Travelling Connect உடன் பதிவுசெய்ய வேண்டி உள்ளதுடன் நீங்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற ஒவ்வொரு தடவையும் மொபைல் தொழிற்பாட்டாளராக மொபிடெலை தெரிவுசெய்வதன் மூலம் அழைப்புக்களை மேற்கொள்ளுங்கள்.
சுற்றுலாப் பிரயாணிகள் வரைபடம் (பிரயாண வழிகாட்டி)
நாட்டிற்கு வருகை தருகின்ற விருந்தினர்களுக்கு இலங்கையில் விஜயம் செய்யவேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், உணவகங்கள், கடைகள் போன்ற பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய வரைபடமொன்றை மொபிடெல் வழங்குகின்றது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலும், இலங்கையிலுள்ள அனைத்து முன்னணி ஹோட்டல்களிலும் சுற்றுலாப் பிரயாணிகள் வரைபடம் கிடைக்கப்பெறுகின்றது.
வரலாற்று இடங்கள் வழிகாட்டி (888) சுருக்கக் குறி
இலங்கையில் ரோமிங் செய்பவர்களுக்கு கலாச்சார மற்றும் சிற்ப வடிவமைப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஒரு விசேட சுருக்கக்குறியே “888” ஆகும். இலங்கையிலுள்ள இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் தொடர்பில் ஆர்வமுள்ளவர்கள் விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அதனை டயல் செய்ய முடியும். மிக இலகுவாக 888 என்ற சுருக்கக்குறியினை டயல் செய்து உங்களுக்கு ஆர்வமுள்ள இடம் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட குரல் விபரத்தை செவிமடுங்கள்
* கட்டணங்கள் அறவிடப்படும்
இலங்கையில் ரோமிங் செய்பவர்களுக்கான ஊக்குவிப்பு வெகுமதிகள்
நீங்கள் மொபிடெல் மூலம் ரோமிங் செய்கின்றபோது அதிகமாக உரையாட முடிவதுடன் பரிசுகள் மற்றும் வியப்புக்களுக்கும் தகைமை பெறுகின்றீர்கள்.