MAIN MENU
1.கடன் என்றால் என்ன?
ஒரு மொபிடெல் முற்கொடுப்பனவுத் திட்ட வாடிக்கையாளரின் கணக்கு மீதி தீர்ந்து போகும் சமயத்திலே அவர் ரூபா 30 இனை கடனாகக் கோருவதற்கு கடன் இடமளிக்கின்றது.
2.கடனிற்கு நான் எவ்வாறு தகைமை பெறுவது?
கடனிற்கு தகைமை பெறுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும்:

நீங்கள் உடன் 6 மாதங்களுக்கு மேலாக இணைப்பில் இருத்தல் வேண்டும்.
மொபிடெல் வாடிக்கையாளர் பதிவுக் கொள்கைக்கு அமைவாக நீங்கள் பதிவினை மேற்கொண்டிருத்தல் வேண்டும்
உங்களுடைய கணக்கிலுள்ள மீதி தீர்ந்துபோனதன் பின்னர் 24 மணித்தியாலங்களுக்குள் கடனுக்கான கோரிக்கை விடுக்கப்பட வேண்டும்
கணக்கின் மீதியானது 5 இற்கும் 0 இற்கும் இடையில் இருத்தல் வேண்டும்
3. கடனை நான் எவ்வாறு கோர முடியும்?
உங்களுடைய தொலைபேசி உபகரணத்திலே #247# இனை அழைப்பதன் மூலமாக கடனை நீங்கள் கோர முடியும்.
4..வழங்கப்பட்ட கடன் தொகை செல்லுபடியாகும் காலம் எவ்வளவு?
ரூபா 30 கடன் 7 தினங்களுக்கே செல்லுபடியாகும்.
5.கடன் சேவைக்கான தொழிற்படுத்தல் கட்டணம் எவ்வளவு?
வெற்றிகரமாகப் பூர்த்திசெய்யப்பட்ட ஒவ்வொரு கடன் கோரிக்கைக்கும் தொழிற்படுத்தல் கட்டணமாக ரூபா 2.00 + வரிகள் மற்றும் தீர்வைகள் அறவிடப்படும்
தொழிற்படுத்தல் கட்டணம் எனது கடனில் இருந்து கழிக்கப்படுமா?
தொழிற்படுத்தல் கட்டணம் கடனில் இருந்து கழிக்கப்பட மாட்டாது
7.கடன் மூலமாக நான் அனுபவிக்கக்கூடிய சேவைகள் எவை?
கடன் மூலமாக நீங்கள் அனுபவிக்கக்கூடிய சேவைகள் வருமாறு::

உள்நாட்டு அழைப்புக்கள் – மொபிடெலில் இருந்து மொபிடெலிற்கு மற்றும் மொபிடெலில் இருந்து ஏனைய வலையமைப்புகளுக்கு
IDD Buddy அழைப்புக்கள்
சர்வதேச நேரடி அழைப்பு சர்வதேச அழைப்புக்கள்
உள்நாட்டு SMS - மொபிடெலில் இருந்து மொபிடெலிற்கு மற்றும் மொபிடெலில் இருந்து ஏனைய வலையமைப்புகளுக்கு
சர்வதேச SMS
அழைப்பு மாற்றீடு
எந்த வலையமைப்பில் இருந்தும் உள்வரும் அழைப்புக்கள்
8.ஒரு தடவையிலே எத்தனை கடன் கோரிக்கைகளை என்னால் மேற்கொள்ள முடியும்?
ஒரு தடவையிலே வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்படுகின்ற ஒரு கடன் கோரிக்கையை மட்டுமே நீங்கள் மேற்கொள்ள முடியும். நீங்கள் முன்னர் பெற்றிருந்த கடனை கணக்கிலே மீள்நிரப்பு செய்வதன்/மீள இட்டுக்கொள்வதன் பின்னரே மீண்டும் ஒரு தடவை உங்களால் கோரிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்துகொள்ள முடிகின்றது.
9. வாரம் ஒன்றில் அல்லது மாதம் ஒன்றில் கடனை கோருவதற்கான தடவைகளிலே உச்ச வரையறை உண்டா?
உங்களுடைய முன்னைய கடனை நீங்கள் மீளவும் அடைத்துக்கொள்ளும் பட்சத்திலே நீங்கள் எத்தனை தடவை கடன்களுக்கான கோரிக்கைகளையும் அனுபவிக்க முடிகின்றது
10.எனது கடனிலே கிடைக்கப்பெறுகின்ற மீதியை நான் எவ்வாறு சரிபார்த்துக் கொள்வது?
உங்களுடைய SMART கடனிலே கிடைக்கப்பெறுகின்ற மீதியை சரிபார்த்துக் கொள்வதற்கு:

சுய பராமரிப்பு IVR 141 இனை உங்களுடைய தொலைபேசி மூலமாக அழைத்து 1 இனை அழுத்தவும்

அல்லது

ஒவ்வொரு தடவை நீங்கள் உங்களுடைய கைத்தொலைபேசியிலே *100# இனை டயல் செய்கின்ற போதும் உங்களுடைய கடனிலே கிடைக்கப் பெறுகின்ற மீதியானது உங்களுக்கு SMS மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
11.mTunes , Any 8 போன்ற சேவைகளுக்கு எனது கடன் மூலமாக சந்தாப்பணம் அறவிடப்படுமா?
mTunes , Any 8 போன்ற சேவைகளுக்கு உங்களது கடன் மூலமாக சந்தாப்பணம் அறவிடப்பட மாட்டாது. பின்வரும் சேவைகளுக்கான பாவனைக்கு மட்டுமே உங்களுடைய SMART கடனிலிருந்து கட்டணம் கழிக்கப்படும்.

உள்நாட்டு அழைப்புக்கள் மற்றும் IDD (Premier மற்றும்Buddy) அழைப்புக்கள்
உள்நாட்டு SMS மற்றும் சர்வதேச SMS
Call Diversion
12.நான் எனது கடனிலே மொத்த தொகையையும் உபயோகிக்காது விட்டால் கூட இன்னமும் ரூபா 30 இனை அடைக்க வேண்டி ஏற்படுமா?
ஆம். நீங்கள் உபயோகித்தாலும் உபயோகிக்காது விட்டாலும் 7 தினங்களுக்குள் உங்களுடைய SMART கடன் தொகையை அடைக்க வேண்டும்.

Looking for...

Prepaid FAQs