MAIN MENU

Useful Travel Information

நாடு தொடர்பான விபரம்

இலங்கை ஒரு குட்டித்தீவாக இருக்கலாம். ஆனால் இந்து சமுத்திரத்தின் முத்து என்ற வகையில் ஆச்சரியமூட்டும் பன்முக அம்சங்களைக் கொண்டது. செழுமை, இயற்கை ஆச்சரியங்கள் மற்றும் புராதன சிற்ப வேலைப்பாட்டு அம்சங்கள் என தீவானது புன்னகைக்கும் மக்களுடன் வளம்பெற்று விளங்குகின்றது. இனம், காலநிலை, கலாச்சாரம், வனஜீவராசி மற்றும் நிலத்தோற்றங்கள் ஆகியவற்றின் பல்வகைத்தன்மை பிரயாணிகளுக்கு வியப்பூட்டுவதுடன் தொன்றுதொட்டு மிளிர்கின்றன. இந்தியாவிற்குத் தெற்காக சர்வதேச வாணிபத்தின் போக்குவரத்துப் பாதையில் முக்கியமான அமைவிடத்தில் அமைந்துள்ள இலங்கை நீண்ட காலமாக அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்தது.
 
வர்த்தக மற்றும் வங்கிச் சேவைத் தலைநகரான கொழும்பு மேற்குக் கரையில் அமைந்துள்ளதுடன் பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்களால் நிறுவப்பட்டது. அரசியல் தலைநகரமான ஜெயவர்த்தனபுர கொழும்பிற்கு மேற்கே சில கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. புராதன இராசதானி தலைநகரங்களையும்,மேம்பட்ட புராதன மக்கள் வாழ்க்கை அம்சங்களையும் குறிப்பாக வடக்கு உட்பட அனைத்து இடங்களிலும் காணலாம். காலணித்துவ ஆட்சிக்கான தடயங்களும் இன்றும் நிலைபெற்றுள்ளன.
 
உ-ம். போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம்
பிரதானமாக கிராமப்புற மக்களை உள்ளடக்கியவாறு தற்போதைய சனத்தொகையானது 19 மில்லியனுக்கும் சற்று அதிகமாக உள்ளதுடன் 74% சிங்களவர்கள், 18% தமிழர்கள், 7% முஸ்லிம்கள் மற்றும் ஏனையோரை 1% அளவிலும் உள்ளடக்கியுள்ளது. பொருளாதாரம் பாரம்பரியமாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் வாசனைத்திரவியங்கள், இறப்பர், தேயிலை மற்றும் தேங்காய் என்பன பிரதான ஏற்றுமதிப் பொருட்களாகும். இன்று ஆடைகள் ஏற்றுமதி அதியுயர் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் மார்க்கமாக உள்ளதுடன் உற்பத்தித் தொழிற்துறைகள் முன்னிலை வகிக்கின்றன.

வருடாந்த சராசரி வெப்பநிலை

நகரம் 

Jan-April

May-August

Sept-Dec

Max

Min

Max

Min
 

Max

Min

கொழும்பு

30°C

22°C

30°C

24°C

29°C

22°C

கண்டி

31°C

17°C

29°C

21°C

28°C

18°C

நுவரெலியா

21°C

14°C

18°C

16°C

18°C

15°C

திருகோணமலை

32°C

24°C

33°C

25°C

33°C

23°C

காலநிலை

மத்திய கோட்டிற்கு அண்மையில் அமைந்துள்ளமையால் இலங்கை வெப்பவலய காலநிலையைக் கொண்டுள்ளதுடன் கரையோரம் முதல் மத்திய மலைப்பகுதிகள் வரையும் காலநிலை வேறுபடுவதுடன் குறிப்பிட்ட பருவகாலங்களையும் கொண்டிருக்கவில்லை. இரு பிரதான பருவக்காற்று மற்றும் இரு இடை பருவக்காற்று காலகட்டங்கள் உள்ளதுடன் வழமையாக தினசரி மழைக்காலமாகவும் அவை உள்ளன. ஏனைய காலங்களில் தென்மேற்குப் பகுதியில் காலநிலை வெப்ப மற்றும் ஈரப்பதன் கொண்டதாகவும், ஏனைய பகுதிகள் வெப்ப மற்றும் உலர் காலநிலையாகவும் காணப்படுகின்றன. 

பயனுள்ள இணைப்புக்கள்

Looking for...